Nanbanin Thigil

Nanbanin Thigil
Click Here Poster Direct to Link Go Youtube

ஞாயிறு, 5 ஜூன், 2016

திரைக்கதை எழுதுவது எப்படி தமிழில்

திரைக்கதை


திரைக்கதை (Screenplayதிரைப்படம்தொலைக்காட்சி படங்களுக்காக எழுதப்படும் எழுத்துக் கோர்வை. திரைக்கதை பல வடிவங்களைக் கொண்டது.

மூன்று அங்க அமைப்பு[தொகு]

"சிட் ஃபீல்டு" என்பவர் திரைக்கதையின் பிதாமகன் என்று அழைக்கப்படுகிறார். இதுவரை உலகில் வெளியாகியுள்ள திரைப்படங்கள், இனி வெளியாகவுள்ள திரைப்படங்கள் ஆகியவை பெரும்பாலும் இவர் வகுத்துக் கொடுத்த ஆரம்பம் - நடு - முடிவு என்ற திரைக்கதை அமைப்பை அடிப்படையாகக் கொண்டே திரைக்கதை எழுதப்பட்டு, உருவாக்கப்படுகிறது. இந்த அமைப்பு "மூன்று அங்க அமைப்பு" (Three Act Structure) என அழைக்கப்படுகிறது.
ஆரம்பம் : இந்த அங்கத்தில் கதையின் முக்கிய கதாபாத்திரங்களையும், இந்த திரைப்படம் எதைப் பற்றியது என்பதையும் தெளிவாக பார்வையாளர்களுக்கு உணர்த்தி விட வேண்டும்.
திருப்பம் : இந்த அங்கத்தில் கதையில் ஒரு திருப்பம் நிகழ்ந்து, அதன் மூலம் கதையின் முடிவை நோக்கிச் செல்ல ஆரம்பிக்க வேண்டும்.
முடிவு : இந்த அங்கத்தில் கதையின் இறுதியில் என்ன நடந்தது, எப்படி நடந்தது என்று விவரித்து திரைக்கதையை முடிக்க வேண்டும்.
இந்த மூன்று அங்க அமைப்பின் இடையில் இரண்டு "சம்பவங்கள்" (plot points) இருக்க வேண்டும். முதல் அங்கத்திலிருந்து, இரண்டாம் அங்கத்துக்குள் கதையை நுழைக்க 'முதல் சம்பவம்' உதவுகிறது. அதே போல இரண்டாம் அங்கத்திலிருந்து, மூன்றாம் அங்கத்துக்குள் கதையை நுழைக்க 'இரண்டாம் சம்பவம்' உதவுகிறது.
"திரைக்கதை எழுதுவது எப்படி" என்று எழுத்தாளர் சுஜாதா எழுதியுள்ள புத்தகம் மிகுந்த பிரசித்தி பெற்றது.
படம் : மாதிரி திரைக்கதை  அமைப்பு 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக