Nanbanin Thigil

Nanbanin Thigil
Click Here Poster Direct to Link Go Youtube

ஞாயிறு, 12 ஜூன், 2016

தமிழ்நாடு தகவல் களஞ்சியம் முழுமையான தொகுப்பு பகுதி 1

தமிழக மாவட்டங்கள்

தமிழ் நாட்டில் 32 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு அவரது தலைமையில் மாவட்ட நிருவாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழகத்தில் மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன. இவற்றுள் விதிவிலக்காக, கன்னியாகுமரி மாவட்டத்தின்தலைநகர் நாகர்கோவில்நீலமலை மாவட்டத்தின் தலைநகர் உதகமண்டலம் என்றுள்ளன. தற்போதுள்ள மாவட்டங்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதமாக பெயர் மாற்றம் பெற்றுவந்துள்ளன. ஒரு சில காலகட்டங்களில் மாவட்டங்களின் பெயருடன் காலம் சென்ற தமிழக தலைவர்கள் பெயரும் இணைத்துப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வந்தன. தற்போது அப்பெயர்கள் நீக்கப்பட்டு, மாவட்டங்களின் பெயர்கள் மட்டும் நிலைத்து நிற்கின்றன.


வரலாறு


தமிழக மாவட்டங்களின் பிரிவினை விவரிக்கும் அசைபடம்
1947 ஆகஸ்டு மாதம் இந்திய விடுதலை பெற்ற பின்னர், பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணமானது சென்னை மாநிலம் என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. 1953 முதல் 1956 வரையிலானமாநில எல்லைகள் சீரமைப்புகளின் வாயிலாக தற்போதைய எல்லைகள் உருவாக்கப்பட்டன. சென்னை மாநிலமானது, 1969ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக தமிழ்நாடு என மறுபெயரிடப்பட்டது. முந்தையசென்னை மாகாணமானது 13 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. அவையாவன: செங்கல்பட்டு,கோயம்புத்தூர்கன்னியாகுமரிமெட்ராஸ்மதுரைநீலகிரிவட ஆற்காடுஇராமநாதபுரம்சேலம்தென் ஆற்காடுதஞ்சாவூர்திருச்சிராப்பள்ளிதிருநெல்வேலி ஆகியனவாகும். இம்மாவட்டங்கள் கீழ்க்காணும் வகையில் பிரிக்கப்பட்டு தற்போதைய புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.

மாவட்டங்கள் பட்டியல்[தொகு]

  1. அரியலூர் மாவட்டம்
  2. இராமநாதபுரம் மாவட்டம்
  3. ஈரோடு மாவட்டம்
  4. கடலூர் மாவட்டம்
  5. கரூர் மாவட்டம்
  6. கன்னியாகுமரி மாவட்டம்
  7. காஞ்சிபுரம் மாவட்டம்
  8. கிருஷ்ணகிரி மாவட்டம்
  9. கோயம்புத்தூர் மாவட்டம்
  10. சிவகங்கை மாவட்டம்
  11. சென்னை மாவட்டம்
  12. சேலம் மாவட்டம்
  13. தஞ்சாவூர் மாவட்டம்
  14. தர்மபுரி மாவட்டம்
  15. திண்டுக்கல் மாவட்டம்
  16. திருச்சிராப்பள்ளி மாவட்டம்
  17. திருநெல்வேலி மாவட்டம்
  18. திருப்பூர் மாவட்டம்
  19. திருவண்ணாமலை மாவட்டம்
  20. திருவள்ளூர் மாவட்டம்
  21. திருவாரூர் மாவட்டம்
  22. தூத்துக்குடி மாவட்டம்
  23. தேனி மாவட்டம்
  24. நாகப்பட்டினம் மாவட்டம்
  25. நாமக்கல் மாவட்டம்
  26. நீலகிரி மாவட்டம்
  27. புதுக்கோட்டை மாவட்டம்
  28. பெரம்பலூர் மாவட்டம்
  29. மதுரை மாவட்டம்
  30. விருதுநகர் மாவட்டம்
  31. விழுப்புரம் மாவட்டம்
  32. வேலூர் மாவட்டம்

மக்கட் தொகை[தொகு]

தமிழக மாவட்டங்களின் மக்கட் தொகை 2011 ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி 7,21,38,958 ஆகும். இதில் அதிக மக்கள்தொகை உள்ள மாவட்டமாக சென்னை மாவட்டம் உள்ளது. இங்கு அதிகபட்சமாக 46,81,087 பேர் வசித்து வருகின்றனர்[1]. இம்மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி சதுர கிலோ மீட்டருக்கு 26,903 ஆக இருக்கிறது. இதன்படி மாநிலத்தில் அதிக மக்கள் அடர்த்தி பெற்ற மாவட்டமாக சென்னை உள்ளது. மாநிலத்தின் மக்கள் அடர்த்தி மிகக் குறைவாக உள்ள மாநிலம் நீலகிரி ஆகும். நீலகிரி மாவட்டத்தின் மக்கள் அடர்த்தி சதுர கிலோ மீட்டருக்கு 288 பேர். கல்வியறிவில் கன்னியாகுமரி மாவட்டம் முதன்மையாக உள்ளது. இங்கு மாவட்டத்தின் 92.14 பேர் கல்வி அறிவு பெற்றவர்களாக உள்ளனர். கல்வியறிவில் 64.71 சதவிகிதத்துடன் தருமபுரி மாவட்டம் கடைசி நிலையில் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக