Nanbanin Thigil

Nanbanin Thigil
Click Here Poster Direct to Link Go Youtube

செவ்வாய், 14 ஜூன், 2016

தமிழ் சினிமாவில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த சிறந்த காதல் வசனங்கள் Part 1

தமிழ் சினிமாவில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த சிறந்த காதல் வசனங்கள்

தமிழ் சினிமாவில் அன்று தொட்டு இன்றுவரை காதல் படங்களுக்கு ஒரு தனியிடம் உண்டு. இன்று முன்னணி நடிகர்களாக ஆக்ஷன் காட்டும் பலரையும் இந்தளவிற்கு வளர்த்து விட்டதில் காதலுக்கு பெரும் பங்குண்டு.
ரயில்களில் தொடங்கிய காதல் தற்போது வாட்ஸ் ஆப் வரை வந்து விட்டது. பார்த்த காதல், பார்க்காத காதல், பேசாத காதல் என்று எவ்வளவோ காதல்களை படங்கள் மூலம் பார்த்து விட்டாலும் கூட காதல் இன்னும் பலப்பல வடிவங்களில் வந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்த நிலையில் நாளைய காதலர் தினத்தை முன்னிட்டு தமிழ் சினிமாவின் சிறந்த காதல் வசனங்களை இங்கே பார்க்கலாம்.
அலைபாயுதே 
சக்தி நான் உன்ன விரும்பல, உன்மேல ஆசைபடல, நீ அழகா இருக்கன்னு நெனைக்கல ஆனா இதெல்லாம் நடந்துடுமோன்னு பயமா இருக்கு”. அலைபாயுதே படத்தில் மாதவன் ஷாலினியிடம் கூறும் இந்த வசனத்தை அநேகமாக எல்லாக் காதலர்களும் தங்கள் நிஜ வாழ்க்கையில் பயன்படுத்தி இருப்பார்கள்.

காதலுக்கு மரியாதை
நான் உன்னை ஆயிரம் முறையாச்சும் பார்த்திருப்பேன். கனவுல என் மனசுக்குள்ள, மறந்துடுறேன் எல்லாத்தையும் மறந்துடுறேன் ஆனா போன ஜென்மத்துல எப்பவோ பார்த்து ஆசை தீராத உன் முகம் என் மனசுக்குள்ளேயே இருக்கு. அத என்னால மறக்கவே முடியாதுகாதலுக்கு மரியாதை படத்தில் விஜய் ஷாலினியிடம் சொல்லும் இந்த வசனம் விஜய்யின் சிறந்த காதல் வசனங்களில் ஒன்று.

விண்ணைத்தாண்டி வருவாயா
இந்த உலகத்துல எவ்ளோ பொண்ணுங்க இருந்தும் நான் ஏன் ஜெஸ்சிய லவ் பண்ணினேன்”, “காதல, தேடிட்டு போக முடியாது. அது நிலைக்காது. அதுவா நடக்கனும், நம்மள போட்டு தாக்கனும், தலைகீழா போட்டு திருப்பனும், எப்பவும் கூடவே இருக்கனும்.அது தான் உணமையான லவ்”. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்பு பேசிய இந்த வசனங்கள் இன்றைய தலைமுறைக்கு அதிகம் பிடித்த காதல் வசனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

காக்க காக்க 
நான் உங்களை கல்யாணம் பணிக்கணும் உங்ககூட என் வாழ்க்கைய வாழணும் உங்க கூட சிரிச்சு பேசணும் உங்க கூட சண்டை போடணும் உங்க தோள்ள சாஞ்சு அழனும், இப்ப போலவே உங்க மேல பைத்தியமா இருக்கணும்என்று காக்க காக்க படத்தில் சூர்யாவிடம் ஜோதிகா பேசிய வசனம்.(ஜோதிகா விஷயத்தில் இது உண்மையாகிவிட்டது)

மெட்ராஸ்
நீதான் வேணும் கல்யாணம் பண்ணிக்கிறியா? சரி வா வந்து பைக்ல உக்காரு கல்யாணம் பண்ணிக்கிறேன்மெட்ராஸ் படத்தில் கேத்தரின் தெரசா ஒரே வசனத்தில் தனது காதலை வெளிப்படுத்தும் இந்த வசனம் காதலர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

அஞ்சான் 
இதே போல அஞ்சான் படத்தில் சமந்தா சூர்யாவைப் பார்த்து நீ நிதானமா இல்ல உன் கால் தரையில படல முதல்ல நில்லு அப்புறம் வந்து சொல்லுவசனம்.

ராஜா ராணி
எனக்கு எங்க அப்பாகிட்ட மட்டும் தான் பயம் மத்தபடி ஐ லவ் யூங்கஎன்று நயன்தாராவிடம் ஜெய் காதலை வெளிப்படுத்தும் வசனம் ரசிகர்கள் பலரையும் கவர்ந்தது. இன்றும் பல காதலர்கள் இந்த வசனங்களை எங்கேயோ ஓரிடத்தில் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதே உண்மை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக