Nanbanin Thigil

Nanbanin Thigil
Click Here Poster Direct to Link Go Youtube

புதன், 29 ஜூன், 2016

ஆத்மாக்கள் நம்மை கொல்ல வருவதில்லை நமக்கு அவை நல்லத்தையே செய்கிறது





ஆத்மாக்கள் நம்மை கொல்ல வருவதில்லை

நமக்கு  அவை நல்லத்தையே செய்கிறது

நாம் தான் அவற்றை தவறாக புரிந்து  கொண்டு உள்ளோம்

ஆத்மாக்கள் ஏன் பூமிக்கு  வருகிறது  அவைகள் நிறைவேறாத ஆசைகள் உடன் இறந்து போகும் ஆத்மாக்கள் அந்த ஆசைகளை நிறைவேற்ற பூமிக்கு  வந்து நிறைவேற்றிவிட்டு  செல்கிறது

அது மட்டும் அல்லாமல் அந்த ஆசைகளை நிறைவேற்ற அதற்கு ஒரு மனித ஒரு வேலை தேவைபடலாம் இல்லை தேவைபடமாலும்  போகலாம்

அந்த ஆத்மாகளை சீண்டினால் நாம் அவ்வளவுதான் நம்மை அது ஒரு வழி பண்ணி விடும் 

ஆத்மாகளால் நம்முடன் தொடர்ப்புகொள்ள முடியுமே தவிர அதனால் நம்முடன் பேச முடியாது 

ஆனால் அதற்கு தேவையானதை குறிப்பால் உணர்த்தும் 

நிறை ஆசையுடன் இறந்த ஆத்மாகள் தான் தன்னுடைய ஆசைகளை நிறைவேத்த இந்த பூமிக்கு வந்து தன்னுடைய ஆசைகள் யார் முலம் நிறைவேறும் என்று கண்டுபிடித்து  அவர்களை தொடர்ப்பு கொள்ள முயற்சிக்கும் 

அவர்கள் இவைகளை பார்த்து பயந்து விட்டால் இவர்கள் ஆசை நிரையசையாக மாறிவிடும் 


பாடல் வீடியோ வடிவில் காண இங்கே கிளிக் செய்யவும்


 
பிறவி என்ற தூண்டில் முள்ளில்

வாழ்க்கை என்ற புழுவைக் கொண்டு

தானே வந்து சிக்கி கொண்டு
சில ஆசைகள் சேகரித்தோம்

மரணம் என்ற வானம் ஒன்றில்
சிறகை சூடி ஏறும் முன்னே

கடைசி ஆசை ஒன்றை மற்றும்
நிறைவேற்றிட ஏங்குகிறோம்.

யார் விழியில் யார் வரைந்த
கனவோ

பாதியிலே கலைந்தால்
தொடராதோ

ஆள் மனதில் யார் விதைத்த நினைவோ
காலமதை சிதைத்தும் மறக்காதோ

பிறவி என்ற தூண்டில் முள்ளில்
வாழ்க்கை என்ற புழுவைக் கொண்டு

தானே வந்து சிக்கி கொண்டு
சில ஆசைகள் சேகரித்தோம்

மரணம் என்ற வானம் ஒன்றில்
சிறகை சூடி ஏறும் முன்னே

கடைசி ஆசை ஒன்றை மற்றும்
நிறைவேற்றிட ஏங்குகிறோம்.

ஒ ஹோ ஹோ
வீழும் உந்தன் கண்ணீர் துளி கரையும் அந்த
மாயம் என்ன

இதழைச் சேரும் முன்னே காயம் ஆறும்
இந்த புன்னகைகள்

உரைக்கும் முன்னே காதல் ஒன்று
மரித்துப் போன சோகம் என்ன

மரிக்கும் முன்னே உதிர்ந்து போன
முத்தம் ஏராளம்

பிறவி என்ற தூண்டில் முள்ளில்
வாழ்க்கை என்ற புழுவைக் கொண்டு

தானே வந்து சிக்கி கொண்டு
சில ஆசைகள் சேகரித்தோம்

மரணம் என்ற வானம் ஒன்றில்
சிறகை சூடி ஏறும் முன்னே

கடைசி ஆசை ஒன்றை மற்றும்
நிறைவேற்றிட ஏங்குகிறோம்

பிறவி என்ற தூண்டில் முள்ளில்
வாழ்க்கை என்ற புழுவைக் கொண்டு

தானே வந்து சிக்கி கொண்டு
சில ஆசைகள் சேகரித்தோம்

மரணம் என்ற வானம் ஒன்றில்
சிறகை சூடி ஏறும் முன்னே

கடைசி ஆசை ஒன்றை மற்றும்
நிறைவேற்றிட ஏங்குகிறோம் 


செவ்வாய், 28 ஜூன், 2016

Small Bud-jet FilmMaking For Anurag Kashyap For Tamil

Click Here The Link On Youtube Video 
சினிமா மீதான ஆர்வம் கொண்டவர்களுக்கும், குறைவான முதலீட்டைக் கொண்டோ, 'ஜீரோ' பட்ஜெட்டிலோ படம் எடுக்க நினைக்கும் அறிமுக இயக்குநர்களுக்கும் அனுராக் காஷ்யப் பத்து வழிமுறைகளை 'எம்.டிவி இந்தியா' மூலம் வழங்கியிருந்தார். அதன் எழுத்து வடிவம் இதோ..
1. குறைவான இடங்களில் கதைக்களம் அமைப்பீர்
முதலில் நீங்கள் செய்ய வேண்டியது எழுதுவதுதான். செட்களைத் தவிருங்கள். சிஜி வேலைகள் இப்போதைக்கு வேண்டாம். மிகவும் குறைவான இடங்களையே பயன்படுத்துங்கள். ஓர் அறையையோ அல்லது அடிக்கடி இரவலாகக் கிடைக்கக்கூடிய இரண்டு மூன்று இடங்களையோ மட்டும் பயன்படுத்துங்கள். தவிர்க்கவே முடியாத நேரங்களில் மட்டும் மற்ற பிற இடங்கள். ஆனால், கதையை எழுதும்போதே உங்களிடம் செலவு செய்ய அதிகப் பணம் இல்லை என்பதை நினைவில் வையுங்கள். அதிகம் செலவு பிடிக்காத இடங்களில் மட்டுமே உங்கள் கதை பயணிக்கும்படி இருக்கட்டும்.
2. நிதானமான - பொறுப்பான குழுவில் இருப்பீர்
பொறுமையாகவும், பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளவும் தயாராக உள்ள ஒரு குழுவுடன் வேலை பாருங்கள். என்னுடைய 'யெல்லோ பூட்ஸ்' படத்தின் பெரும்பாலான காட்சிகள் என் வீட்டிலேயே படமாக்கப்பட்டன. படத்தில் நடித்த நடிகர்கள் எல்லாம் பணம் கேட்காதவர்கள்; அவர்களுடைய சொந்த உடையைப் படப்படிப்புக்குப் பயன்படுத்துபவர்கள். உண்ணும் உணவைக் கூட எடுத்து வருபவர்கள்.
இந்த மாதிரியான குழு இருந்தால் போதும். நீங்கள் நட்சத்திரங்களை நாடிப் போக வேண்டியதில்லை. இங்கு நடிப்புத் தாகம் கொண்ட ஏராளமான இளம் நடிகர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். படம் குறைவான இடங்களில் எடுக்கப்பட வேண்டும். ஆனால் அது படத்தில் வெளிப்படக்கூடாது. பரபரப்பாய் இருக்கும் பொது இடங்களில் நீங்கள் படம் பிடிப்பது மக்களுக்கு தெரியக்கூடாது. இந்த மாதிரியான இடங்களில் நீங்கள் மறைத்துவைக்க முடிகிற கேமராக்களை, 5டி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தலாம்.
3. தேவைகளைக் குறையுங்கள்
நீங்கள் எடுக்கும் சினிமாவுக்கு நேர்மையாக இருக்க வேண்டும். வயதான கதாபாத்திரத்துக்கு இளம் நடிகர் தேவையில்லை. அதற்கான மேக்கப் அனாவசியம். செலவைக் குறைத்தல் அவசியம். அதற்கு பதிலாக அதிக வண்ணங்களைப் பயன்படுத்துங்கள். உங்களுக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்றுதான் சொன்னேன். மற்றவர்களுக்கு இல்லை. அடுத்தவர்களின் பார்வைக்கு நீங்கள் நேரத்தை வீணடிப்பதாகத் தோன்றலாம். ஆனால் உங்களுக்கு படம் உருவாக்கப்பட வேண்டும். அர்ப்பணிப்புடன் வேலை செய்தால் கடைசியில் அவர்கள் புரிந்து கொள்வார்கள்.
4. தன்னம்பிக்கையுடன் இருங்கள்
பெரும்பாலான நேரங்களில் நியாயமே இல்லாத மனிதர்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். நீங்கள் அவர்களை புரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் புரிந்து கொண்டாற்போல நடியுங்கள். அவர்கள் சொல்வதைக் கேட்பது போலப் பேசுங்கள். ஆனால் உண்மையில் உங்கள் படத்துக்கு என்ன வேண்டுமோ, அதை மட்டும் செய்யுங்கள். இறுதி உருவாக்கத்தை அவர்களே ரசிப்பார்கள்.
5. எல்லாரிடமும் நன்றாகப் பழகுங்கள்
மற்றவர்களிடம் இருந்து என்ன வேண்டும்; அது எப்படிக் கிடைக்கும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால், இது ஒரு வழிப்பாதை கிடையாது. முதலில் நீங்கள்தான் உதவும் விதமாய் இருக்க வேண்டும். பின்னர் உங்களுக்குத் தேவையானது தானாய்க் கிடைக்கும்.
6. கடன் கேளுங்கள்
ஒலி வடிவமைப்புக்கும், படத் தொகுப்புக்கும் உங்களுக்கு ஸ்டூடியோ தேவை. தொடர்ந்து அவர்கள் பின்னால் அலைய வேண்டும். உங்கள் இடத்துக்கு எடுத்துக் கொண்டு போக நினைக்கக் கூடாது. ஸ்டூடியோவை அவர்கள் தர முடிகிற நேரத்தைக் கேட்டு, அமைதியாய் அங்கேயே அமர்ந்து வேலை பாருங்கள். முக்கியமான ஆளுமைகளின் உதவியாளர்களை அணுகுங்கள். பட வாய்ப்புக்காக ஏங்குபவர்களாக அவர்கள் இருந்தால் இன்னும் நல்லது. அவர்களை சரியான விதத்தில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
7. சாத்தியமான விளம்பரங்களை நாடுங்கள்
ஒவ்வொரு சாத்தியமான வழியிலும் உங்கள் படத்தை விளம்பரப்படுத்துங்கள். ரசிகர்களை அடையாளம் காண்பது மிகவும் முக்கியம். இன்றைய நிலையில் உங்களை யாருக்கும் தெரியாது. உங்கள் உணர்வுகளைக் குறித்து கவலை கொள்ள யாருமில்லை. எல்லோரும் எதிர்பார்ப்பது உங்கள் படம் இன்னும் உயிருடன் இருக்கிறதா என்பதே.
இதற்கு எளிதான வழி, படம் குறித்த விளம்பரங்களை அவ்வப்போது படங்களையே யூடியூபில் பதிவேற்றுவதுதான். வைரல் வீடியோக்களை உருவாக்குங்கள். சொந்தமாய் விளம்பரங்களை, டிவிடிக்களை உருவாக்கி அதை சந்தைப்படுத்துங்கள். எப்படியாவது உங்களுக்கான ரசிகர்களை அடையாளம் காணுங்கள்.
8. ஆசைகளை தியாகம் செய்வீர்
உங்கள் ஆசைகளைத் தியாகம் செய்யுங்கள். தேவையில்லாத செலவுகளைக் குறைத்து ஒரு டிஎஸ்எல்ஆர் கேமராவை வாங்குங்கள். நாட்களை சந்தோஷமாய்க் கழிக்கும் நண்பர்களைக் கண்டு கவலை கொள்ளக்கூடாது. நானே சினிமா வாழ்க்கையில் இருந்து கொண்டு 19 வருடங்கள் கழித்துத்தான் சொந்தமாய் வீடு வாங்கி இருக்கிறேன்.
9. கதையின் உள்ளடக்கத்தின் அவசியம் அறிவீர்
கதையின் உள்ளடக்கம்தான் முக்கியமே தவிர மற்ற விஷயங்கள் இல்லை. காட்சிகள் முக்கியமில்லை. அதைச் சொல்லும் விதமும் கதாபாத்திரமும்தான் முக்கியம். பரபரப்பாய் இயங்கும் பொதுவெளிகளில் படம்பிடிக்கும்போது அந்த நேரத்தில் கிடைக்கும் சிறந்த தருணங்களைப் படம்பிடியுங்கள். அங்கு தேவையில்லாமல் கோபப்படுவது பயனற்றது. ஆனால் முந்தைய நாளே அந்த ஷாட் ஒத்திகை செய்து பார்க்கப்பட்டிருக்க வேண்டும். படம் மிகவும் இயற்கையாய் இருக்க வேண்டுமேயன்றி குறைந்த பட்ஜெட் படமாய்த் தெரியக்கூடாது.
10. பட விழாவில் கவனம் கொள்வீர்
பட விழாக்களுக்கு உங்கள் படங்கள் அனுப்புவதோடு விட்டுவிடாமல், அது தேர்வாளர்களால் பார்க்கப்பட்டதை உறுதி செய்யுங்கள். முதலில் எல்லாத் திரைப்பட விழாக்களையும் பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். அதில் எந்த விழா தன்னிச்சையான சினிமாவை ஆதரிக்கிறது எனப் பாருங்கள்.
அமெரிக்க, லுக்கானோ, இத்தாலி திரைப்பட விழாக்கள் இத்தகைய சினிமாவை ஊக்குவிக்கின்றன. அதைக் கவனியுங்கள். வெறும் படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்புதல் மட்டும் போதாது. தேர்வாளர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பி அவர்கள் படத்தைப் பார்க்கிறார்களா எனபதைக் கவனியுங்கள். பார்த்தால்தானே பிடிக்கிறதா பிடிக்கவில்லையா எனத் தெரிய வரும். அதை முதலில் உறுதி செய்யுங்கள். விரைவில் திரையில் உங்களைப் பார்க்க என்னுடைய வாழ்த்துக்கள்!
அனுராக் காஷ்யாபின் இந்த 10 கட்டளைகளை வீடியோ வடிவில் காண யூடியூபில் 
Click Here This Link The 10 Commandments of No-Budget Filmmaking with Anurag Kashya எனக் குறிப்பிட்டுத் தேடுக.

திங்கள், 27 ஜூன், 2016

Gothika Hollywood Movie Review For Tamil

IDMB  - http://www.imdb.com/title/tt0348836/

Gothika Movie Review For Tamil 

Genre : Supernatural Horror Film 

Running Time : 98 Mints


இந்த படத்துல ஹீரோ கிடையாது ஹீரோயின் மட்டும்தான் எந்த படத்திலும் இல்லாத ஒரு விஷயம் இந்த படத்தில் உள்ளது வில்லன் Wife தான் இந்த படத்தின் ஹீரோயின் மொத்தம் ரெண்டு வில்லன் ஒரு வில்லன் படம் ஆரம்பிச்சு கால் மணி நேரத்துல செத்துபோய் விடுவார் அந்த பழி ஹீரோயின் மேல விழும் .அப்போ அவள்  மெண்டல் ஆகிட்ட ஒரு போலியா ஒரு ஆதாரம் ரெடி பண்ணி மெண்டல் ஆஸ்பத்திரியில் சேர்த்துவிடுகிறார்கள். அங்கு ஹீரோயின் போலீஸ் விசாரணை வளையத்திற்குள் வருகிறார்கள் அவள் தன் மனநிலை பதிக்கபட்டவள் இல்லை என்று சொல்லுகிறாள் ஆனால் அவர்கள் அதை நம்ப மறுக்கிறார்கள்.சில நாட்களுக்கு அமானுஷ்ய துண்டல்கள் அவளுக்குள் வருகிறது அதனால் அவள் மிக பெரிய பாதிப்புக்கு ஆளாகிறாள்  
ஆனால் அந்த அமானுஷ்ய சக்தியால் அந்த இடத்தில் இருந்து தப்பித்து போக வாய்ப்பு கிடைக்கிறது அந்த வாய்ப்புபை பயன்படுத்தி அவள் தப்பித்து சொல்கிறாள் அவள் வீட்டிற்க்கு சென்ற பின்பு தன்னுடைய கணவனை தான் எப்படி அந்த அமானுஷ்ய கட்டுபாட்டில் செய்தேன் அவள் மனக்கண்ணில் விரிகிறது அதன் பின்பு அந்த அமானுஷ்ய சக்தி அவள் எந்த காரணத்திற்கு கொலை செய்தால் என்பதை காட்டுகிறது அவன் ஒரு பெண் காம பித்தன் என்பதையும் காட்டுகிறது.அவனுக்கு ஒரு கூட்டாளி இருக்கிறான் என்று சொல்லுகிறது 

அந்த கூட்டாளி யார் என்பதை சொன்னால் மொத்த கதையும் தெரிந்து விடும் 

இந்த படம் +16 வகையினருக்குக்கான படம் இந்தியாவில் U/A Certificate கொடுத்து இருப்பார்கள்  

     
  

சனி, 25 ஜூன், 2016

Takkaru Takkaru ஒரு தமிழனின் கண்ணிர் பதிவு




Takkaru Takaru ஒரு தமிழனின் கண்ணிர் பதிவு
எப்போதும் போல் சாதாரண மியூசிக் வீடியோ என்று
தான் நினைத்தேன் ஆனால் அதை எல்லாம் பொய்யாக்கி ஒரு அருமையான குறும்படம் போல்
மியூசிக் வீடியோவை ரெடி பண்ணி வைத்து உள்ளார் ஜல்லிக்கட்டை எதிர்ப்பது தனியார்
நிறுவனங்கள் தான் என்பதை வெட்ட வெளிச்சமாக காட்டி உள்ளதை மிக தைரியம் என்று
சொல்வதை விட எங்கள் உடைய உரிமையை நாங்கள் தட்டிகோட்போம் எதிர்த்து யார் வந்தாலும்
கவலைபடமாட்டோம்

உலகிலேயே அதிக பால் தரும் பசுக்கள் மற்றும் மிக
அதிகமான இயற்கை வளங்கள் நம்நாட்டில் அதுவும் நம் தமிழகத்தில் தான் அதிகம்
இருக்கிறது என்று எல்லா உலக நாடுகளுக்கும் தெரியும் உலக நாடுகள் பார்வை முழுவதும்
தமிழ்நாட்டின் பக்கம் திரும்பிவுள்ளது இதற்கு காரணம் நமக்கு என்று தனி நாடு
கிடையாது தமிழர்கள் யார் என்று உலக நாடுகள் அனைத்திற்கும் தெரியும் நம் வரலாறும்
தெரியும் அது மட்டுமா தான் நாம் மட்டும் திருப்பிஅடித்தால் இந்த உலகத்தில் ஒருவன்
கூட தமிழன் மேல் கைவைக்க மாட்டார்கள் ஏன்என்றால் நம் அடி எப்படி இருக்கும் என்று
அவர்களுக்கு தெரியும் நமக்கு என்று நம் ஒரு தனி நாடு கேட்டால் கூட யாரும்
தரமாட்டார்கள் ஏன் தெரியுமா நமக்கு தனி நாடு தந்து விட்டால் அவர்களால் நம்மை
ஒன்றுமே செய்ய முடியாது அதனால் தான்
இந்த உலகத்தில் ஒரு மொழிகேன்று தனி நாடு இல்லாத மொழி நம் தமிழ் மட்டுமே ஆகும்
ஒரு நாட்டில் மட்டுமே பேசப்படும் சிங்கள மொழிக்கு கூட இலங்கை என்று ஒரு நாடு
இருக்கிறது ஆனால் உலகம் முழுவதும் பரவலாக பேசுப்படும் தமிழ் மொழிக்கு என்று ஒரு
நாடு இல்லை அதுவும் ஆறாவது இடத்தில் உள்ளது அதிலும் ஹிந்தி மொழி கூட நமக்கு பின்னால்தான்
உள்ளது இதில் தமிழ் மொழி தான் இந்த உலகில் மிக பழமையான மொழி ஆகும் என்று சிறப்பு
இருந்தும் நாம் தினம் செத்து செத்து மடிந்து கொண்டு இருக்கிறோம் என்ன சொல்வது இந்த
உலகை     
நீயோ நானோ பாரம்பரிய விவசாய குடும்பத்தில்
இருந்து வந்தவர்கள் தான் ஆனால் நாம் அந்த அடையாளத்தை எல்லாம் அழித்து விட்டு
இப்போது தனிமரமாக நின்று அடுத்தவர்கள் போடும் பிட்சா பர்கர் என்று உண்டு வாழ்ந்துகொண்டு
இருக்கிறோம் ஒரு காலத்தில் நூறு நூற்றிமைந்து வயது வரை வாழ்ந்த நாம் இப்போது
முப்பது வயது வரை வாழ கூட நம் செத்து கொண்டு இருக்கிறோம் அது மட்டும்மா நம் உணவு
முறை மாற்றம் மற்றும் இயற்கையான சூழ்நிலையை செயற்கைகாக மாற்றியது என்று இன்னும் பல
முன்னால் கோழி எழுப்பும் போது எழும் நாம் இப்போது மதிய உணவிற்கு தான் எழுகிறோம்
அதுமட்டுமா சரியான விகித்தலில் உணவு உண்டது சுற்றமும் உற்றமும் சிறப்பாக இருந்தது
எல்லாம் இப்போது தலைகிழாக மாறிவிட்டது கிராமத்திலும் நகரத்திலும் இருந்த சுத்தம்
இப்போது மாறி அசுத்தமாகி விட்டது
சொல்லவந்தாயே மறந்து விட்டு ஏதோ ஏதோ சொல்லி
கொண்டு இருக்கிரறேன்
       
ஜல்லிக்கட்டு
நம் இரத்தத்தில் உரிய ஒரு சொல் ஒரு விளையாட்டு என்று எப்படி வேண்டும்மானால் வைத்து
கொள்ளலாம் அது நம் பாரம்பரியம் யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் காளைகள் மற்றும்
பசுக்கள்ளை நாங்கள் எங்கள் விட்டில் ஒருவராக தெய்வமாக நினைக்கிறோம் தெய்வத்தை
நேரில் பார்த்து உண்டா என்று யாராவது கேட்டால் நாங்கள் எங்கள் விட்டில் இருக்கும்
காளைகள் மற்றும் பசுக்களை தான் காட்டுவோம் ஏன்ன்றால் உலகிலேயே காளைகள் மற்றும்
பசுக்களை தெய்வதிற்க்கு நிகராக படையல் வைத்து வணங்கும் ஒரே இனம் நம் தமிழ் இனம்
தான் அதை எங்களுக்கு துன்புறுத்த தெரியாது இதை மட்டும் அழித்துவிட்டால் உலக
கார்பேர்டட் கம்பெனிகள் அணைத்து நம் தமிழ் நாட்டில் கால் உன்றிவிடும் அப்புறம் நம்
அனைவரும் அவர்களுக்கு அடிமை ஆகிவிட வேண்டியது தான் நாம் அனைவரும் ஒன்று பட்டு
நிலைத்து நின்று போராடினால் எந்த கொம்பனாலும் நம்மைலை அசைக்க முடியாது

ஒன்று படுவோம் வென்று எடுப்போம்

நம் இனத்தை பாதுகாப்போம்



#SAVEJallikattu                    

செவ்வாய், 21 ஜூன், 2016

24 வருட திரைவாழ்க்கையில் விஜய் அண்ணாவின் ஏற்ற இறக்கங்கள்

இளையதளபதி என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் விஜய் கடந்த 1992ஆம் ஆண்டு 'நாளைய தீர்ப்பு' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக திரையுலகில் அறிமுகனார். அவர் திரையுலகிற்கு வந்த இந்த 24 வருடங்களில் அதிகபட்ச உச்சத்தையும், அதிகபட்ச பிரச்சனைகளையும் சந்தித்துள்ளார். சுடசுடத்தான் பொன் மென்மேலும் ஒளிர்வதை போல விஜய் பிரச்சனைகளை சந்திக்க சந்திக்கத்தான் பிரபலமானார். அவர் இந்த 24 வருடங்களில் சந்தித்த ஏற்ற இறக்கங்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்ப்போம்.
தனது 18வது வயதில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய 'நாளைய தீர்ப்பு என்ற படத்தில் ஒரு இளைஞனாக விஜய் அறிமுகமானார். முதல் படம் பெரிய வெற்றியை பெறவில்லை. அவரது தோற்றத்தைக் கிண்டலடித்து சில முன்னணி பத்திரிகைகள் விமர்சனம் எழுதின. இன்று அதே பத்திரிகைகள் விஜய்தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று போட்டிபோட்டுக்கொண்டு அறிவிக்கின்றன. விஜய்யின் அசுரத்தனமான வளர்ச்சிக்கு இதுவே மிகச் சிறந்த சான்று.

தொடக்க ஆண்டுகளில் விஜய்யை பிரபலமாக்க வேண்டும் என்பதற்காகவே அவரது தந்தை, இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், 'செந்தூரபாண்டி' படத்தில் கேப்டன் விஜயகாந்துடன் விஜய்யை நடிக்க வைத்தார். அவரது கணிப்பு சரியாக இருந்தது. விஜயகாந்த் ரசிகர்கள் உள்பட அனைவருமே விஜய் என்ற நடிகர் இருக்கின்றார் என்பதை தெரிந்து கொண்டனர்.
மூன்றாவது படமான 'ரசிகன்' திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது.விஜய்யின் நடிப்பு, ஆக்சன் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளுடன் அமைந்த திரைக்கதை, சங்கவியின் கவர்ச்சி ஆகியவை இந்த படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தன. அதன் பின்னர் விஜய் நடித்த 'தேவா, அஜித்துடன் இணைந்து நடித்த 'ராஜாவின் பார்வையிலே', ’விஷ்ணு’, ’சந்திரலேகா’, ’கோயமுத்தூர் மாப்ளே' ஆகிய படங்கள் பெரிய தாக்கம் எதையும் ஏற்படுத்தாதால் விஜய் ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தால் மட்டுமே திரையுலகில் நீடிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது.
அந்த நேரத்தில்தான் இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் 'பூவே உனக்காக' படத்தில் நடிக்கும் வாய்ப்பு விஜய்க்குக் கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட விஜய், காதல், நகைச்சுவை, குடும்ப செண்டிமெண்ட் என்று அனைத்து விதமான காட்சிகளிலும் தன் திறமையை முழு அளவில் வெளிப்படுத்தி அனைத்து ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்துவிட்டார். குறிப்பாக இளம்பெண்கள் அதிக அளவில் விஜய்க்கு ரசிகர்கள் ஆனது இந்த படத்திற்கு பின்னர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. காதல் தோல்வி குறித்து கிளைமாக்ஸில் அவர் பேசும் வசனம் இன்றளவிலும் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றது. 1996ஆம் ஆண்டில் வசூலை வாரிக் குவித்த இந்தப் படம் 275 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது.
'பூவே உனக்காக' வெற்றிக்கு பின்னர் விஜய் தொடர்ந்து காதல் படங்களிலேயே நடித்து வந்தார். ஒருசில காதல் படங்கள் தோல்வி அடைந்தாலும் விஜய்யை அனைத்து தரப்பினர்களும் ஒரு நல்ல நடிகராகவும், விநியோகிஸ்தர்கள் மத்தியில் முதலீட்டுக்கு உத்தரவாதம் தரக்கூடிய நடிகராகவும் ஏற்றுக் கொள்ள வைத்த படம் 'காதலுக்கு மரியாதை'. ஃபாசில் இயக்கிய இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
காதலுக்கு மரியாதை' வெற்றிக்கு பின்னர் விஜய் நடித்த 'நினைத்தேன் வந்தாய், ப்ரியமுடன், துள்ளாத மனமும் துள்ளும்” ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. ஆயினும் 'நெஞ்சினிலே', 'மின்சாரக் கண்ணா', 'கண்ணுக்குள் நிலவு’ ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் மீண்டும் அவருக்கு ஒரு இறங்குமுகம் ஏற்பட்டது. இந்த இறங்கு முகத்தை ஏறுமுகமாக்கியது இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவின் 'குஷி'
இன்றும் கூட தொலைக்காட்சியில் எத்தனை முறை இந்தப் படத்தை ஒளிபரப்பினாலும் அவரது ரசிகர்கள் தவறாமல் பார்த்து ரசிக்கும் இந்த படம் விஜய்க்கு ஒரு திருப்புமுனையைக் கொடுத்தது. 'குஷி’யை தொடர்ந்து ’பிரண்ட்ஸ்’,  ப்ரியமானவளே, ’பத்ரி’, ’ஷாஜஹான்’, ’தமிழன்’, ’யூத்’,” என காதல் மற்றும் குடும்ப செண்டிமெண்ட் படங்களில் விஜய் மாறி மாறி நடித்து தனது மார்க்கெட்டை சரியாமல் பார்த்துக்கொண்டார். இந்தப் பட்டியலில் கடைசி மூன்று படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றாலும் அனைத்திலும் பாடல்களும் விஜய்யின் நடிப்பும் பரவலான ரசிகர்களை ஈர்த்தன.
தொடர் ரொமான்ஸ் படங்களுக்குப் பிறகு விஜய்யை ஆக்சன் ஹீரோவாக மாற்றியது ’பகவதி’. ஏ.வெங்கடேஷ் இயக்கிய இந்தப் படம் வசூல் ரீதியாக வெற்றிபெறவில்லை என்றாலும் விஜய்யின் ஆக்‌ஷன் இமேஜை உயர்த்தியது. தேவா இசையில் பாடல்களும்  வெற்றிபெற்றன.  அடுத்ததாக விஜய் நடித்த படம் ’வசீகரா’. காதல்-காமடி-செண்டிமெண்ட் அகியவற்றின் சரியான கலவையாக அமைந்த இந்தப் படம் இளைஞர்களையும் குடும்ப ரசிகர்களையும் ஈர்க்கத் தவறவில்லை. பாடல்களும் வெற்றிபெற்றன. எல்லாவற்றுக்கும் மேலாக விஜய்யின் காமடி திறமையை மிகச் சிறப்பாக பயன்படுத்திய படங்களில் இதுவும் ஒன்று. இத்தனை இருந்தும் இந்தப் படமும் என்ன காரணத்தாலோ எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. அடுத்ததாக வந்த ’புதிய கீதை’ வித்தியாசமான கதைக்களம். விஜய்யின் சிறந்த நடிப்பு, சூப்பர் ஹிட் பாடல்கள் ஆகியவை இருந்தாலும் வணிக வெற்றிபெறவில்லை.
இவற்றைத் தொடர்ந்து மீண்டும் ஒரு சூப்பர் ஹிட் வெற்றியைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்குள்ளானார் விஜய். அப்போது அறிமுக இயக்குனர் ரமணா இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியான  ’திருமலை’ மிகப் பெரிய வெற்றிபெற்றதோடு விஜய்யின் திரைவாழ்வில் முக்கியமான திருப்புமுனையாகவும் அமைந்தது. விஜய்யை மீண்டும் ஆக்‌ஷன் பாதைக்குத் திருப்பியது. பஞ்ச் வசனங்கள், அதிரடி ஆக்சன் காட்சிகள் ஆகியவை விஜய்யை பற்றிக்கொண்டது இந்தப் படத்தில் இருந்துதான் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக “வாழ்க்கை ஒரு வட்டம்டா, இங்க ஜெயிக்கிறவன் தோப்பான், தோக்கிறவன் ஜெயிப்பான்” என்ற வசனம் விஜய்யின் திரையுலக வாழ்க்கைக்கும் பொருந்தும்படி அமைந்தது.

ஆக்சன் பட களத்தில் விஜய் இறங்கிய பின்னர் அவர் நடித்த  'கில்லி, திருப்பாச்சி' படங்கள் அவரை வசூல் நாயகன் அந்தஸ்திற்கு உயர்த்தின. பிரபு தேவா இயக்கத்தில் வெளிவந்த 'போக்கிரி' திரைப்படம் விஜய்யின் மார்க்கெட்டை உச்சத்திற்கு கொண்டு சென்றது. விஜய் தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகர் என்ற நிலை ஏற்பட்டது 'போக்கிரி' வெற்றிக்கு பின்னர்தான். இந்த மூன்று படங்களுமே ’பிளாக்பஸ்டர்’ என்று சொல்லத்தக்க அளவில் வெற்றிபெற்றன. இவற்றுக்குடையில் சிவகாசி என்ற ஆக்‌ஷன்-செண்டிமெண்ட் படமும் வெற்றிபெற்றது. இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் இயக்கிய ’சச்சின்’ ஒரு இடைவெளிக்குப் பின் விஜய் நடித்த காதல் படம். இந்தப் படம் முதலுக்கு மோசம் செய்யவில்லை அதோடு விஜய்யின் அழகான நடிப்புக்காகவும் நகைச்சுவை மற்றும் பாடல்களுக்காகவும் ரசிகர்களின் வரவேற்பைப் பெறத் தவறவில்லை.
’போக்கிரி’யின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ’கில்லி’ இயக்குனர் தரணியுடன் ’குருவி’ என்ற படத்துக்காக மீண்டும் இணைந்தார் விஜய். பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களின் ஆதரவைப் பெறவில்லை. அதைத் வித்த்தியாசமான முயற்சியும், விஜய் முதல்முறையாக இரட்டை வேடங்களில் நடித்த படமுமான ’அழகிய தமிழ் மகன்’ படமும் வெற்றிபெறவில்லை. போக்கிரிக்குப் பின் பிரபுதேவாவுடன் மீண்டும் இணைந்த ’வில்லு’ படமும் படுதோல்வியடைந்தது. அடுத்ததாக வந்த ’வேட்டைக்காரன்’ பரபர ஆக்‌ஷன் திரைக்கதைக்காகவும் விஜய்யின் பஞ்ச் வசனங்கள் மற்றும் விஜய் ஆண்டனியின் சூப்பர் ஹிட் பாடல்களுக்காகவும் சுமாரான வெற்றிபெற்று சற்று ஆசுவாசம் அளித்தது. இது விஜய்யின் 49ஆவது படம்.
50ஆவது படம் என்பது ஒரு நாயக நடிகரின் திரைவாழ்வில் மைல்கல். அப்படி ஒரு மைல்கல் படமாக அமைந்திருக்க வேண்டிய ’சுறா’, விஜய் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்து வெற்றிபெறத் தவறியது.
தொடர் தோல்விகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு பிரேக் கொடுக்கும் படமாக அமைந்தது 'காவலன்' திரைப்படம். ’ஃப்ரெண்டஸ்’ இயக்குனர் சித்திக்குடன் விஜய் மீண்டும் இணைந்த இந்தப் படம் விஜய்யின் நடிப்புத் திறமை மிகச் சிறப்பாக வெளிப்பட்ட படங்களில் ஒன்று. ஆக்‌ஷன், பஞ்ச் வசனங்கள் பேசி மாஸ் ரசிகர்களை ஈர்ப்பதில் மட்டுமல்லாமல், காதல், காமடி, செண்டிமெண்ட் போன்ற அம்சங்களிலும் சிறப்பான நடிப்பை வழங்கி பெண்களையும் நடுத்தர வயது ரசிகர்களையும் ஈர்க்கும் வல்லமையும் விஜய்க்கு உண்டு என்பதை மீண்டும் ஒரு முறை ஆணித்தரமாக நிரூபித்த படம் இது.  
2012ஐ விஜய்யின் திரைவாழ்வில் மிக முக்கியமான ஆண்டு என்று சொல்லலாம்.  தமிழ் சினிமா வரலாற்றில் பெரிதும் மதிக்கப்படும் இயக்குனர்கள் பட்டியலில் இடம்பெற்ற ஷங்கர் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோரோடு இணைந்த விஜய்யின் படங்கள் இவ்வாண்டில் வெளியாகி வசூல் ரீதியாக சக்கைபோடுபோட்டதோடு விமர்சகர்களின் பரவலான பாராட்டையும் பெற்றன.
ஷங்கர் இயக்கிய ’நண்பன்’ இந்தியில் ஆமீர் கான் நடிப்பில் வெளியான ’த்ரீ இடியட்ஸ்’ படத்தின் ரீமேக். இந்தப் படத்தின் போது 35 வயதைக் கடந்திருந்த விஜய் ஒரு பொறியியல் கல்லூரி மாணவன் வேடத்துக்கு கச்சிதமாகப் பொருந்தியிருந்தார். பாத்திரத்துக்குத் தேவையான மிகச் சிறந்த எமோஷனல், காதல் மற்றும் காமடி கலந்த நடிப்பையும் வழங்கி விமர்சகர்களைப் பாராட்ட வைத்தார். ’விஜய் ஒரு மசாலா நாயகன்’, அவருக்கு நடிக்கத் தெரியாது, அழுத்தமான கதையம்சமுள்ள படங்களில் பொருந்தமாட்டார்” என்று சொன்னவர்கள் மூக்கில் விரலைவைத்து தங்கள் கருத்தை மாற்றிக்கொள்வதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.
 'துப்பாக்கி' திரைப்படம் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகிய இருவருக்குமே பெரிய அந்தஸ்தை கொடுத்தது. தமிழ் சினிமாவில் ரஜினி படங்களை அடுத்து அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை 'துப்பாக்கி' படம் பெற்றது. மேலும் இந்த படம் ரூ.100 கோடி கிளப்பிலும் இணைந்தது.அதோடு இந்திய நாட்டின் தீவிரவாத அச்சுறுத்தல், ராணுவத்தினரின் தியாகம் ஆகியவை பற்றிய அழுத்தமான படைப்பாகவும் அமைந்து விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது.

'துப்பாக்கி' படத்திற்கு பின்னர் விஜய் நடித்த படம் என்றால் பிரமாண்ட ஓப்பனிங் வசூல் கொடுக்கும் படம் என்று விநியோகிஸ்தர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை ஏற்பட்டது. இதன் பின்னர் விஜய் நடித்த ’கத்தி’, ’ஜில்லா’ ஆகிய படங்கள் நல்ல வசூலையும் 'தலைவா', புலி' ஆகிய படங்கள் சுமாரான வசூலையும் கொடுத்தன. ’தலைவா’ பல சிக்கல்களைக் கடந்து தமிழகத்தில் தாமதமாக வெளியானதால் எதிர்பார்த்த வெற்றிபெறவில்லை. ‘புலி’ படம் வித்தியாசமான ஃபேண்டஸி முயற்சி என்று பாராட்டப்பட்டாலும் பலத்த எதிர்பார்ப்புக்கு தீனி போடாததால் வணிக வெற்றி பெறவில்லை.
 அதற்குப் பின் அடுத்த  சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு தகுதியானவர் விஜய்தான் என்பதை நிரூபித்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் 'தெறி'. இந்த படத்தின் வசூல், படக்குழுவினர்களே எதிர்பார்க்காத  அளவுக்கு பிரமாண்டமாக இருந்தது. உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆன இந்த படம் செங்கல்பட்டு ஏரியாவில் திரையிடப்படாத நிலையிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆக்‌ஷன், செண்டிமெண்ட், காதல், காமடி என்று அனைத்து விதமான நடிப்பிலும் தான் கில்லி என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறார் விஜய். இந்தப் படத்தில் ஐந்து வயது குழந்தைக்கு அப்பாவாக முதிர்ச்சியான நடிப்பை வழங்கியிருந்தார் விஜய்.
வெற்றி, தோல்வி என மாறி மாறி சந்தித்து வருவது திரையுலகில் உள்ள அனைவருக்குமே கிடைக்கும் அனுபவம்தான். ஆனால் தோல்விகளை கண்டு துவளாமல் மீண்டும் ஃபீனிக்ஸ் பறவை போல் எழுந்து அடுத்தடுத்து வெற்றியை கொடுப்பவர் விஜய். இதைக் கிட்டத்தட்ட அனைத்து தரப்பினர்களும் ஒப்புக்கொகின்றனர்.
தமிழ்த்திரையுலகில் ஒரு தமிழர் உச்சத்தை பெற்றுள்ளது தமிழர்களான நாம் அனைவருமே பெருமைப்பட வேண்டிய ஒரு விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நாளை பிறந்தநாள் கொண்டாடவுள்ள விஜய்க்கு எங்களது உளம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை கூறிக்கொள்வதோடு விஜய் இன்னும் பல வெற்றி படங்களில் நடிக்க அவருக்கு எங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
விஜய்யின் இந்தப் பயணம் மேன்மேலும் தொடர, அவர் மேலும் பல சாதனைகள் புரிய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்...

இளையதளபதி பற்றி நச்சுன்னு பத்து பாயிண்ட்ஸ் 

  1. நாளைய தீர்ப்பு படத்துலா இருந்து தெறி படம் வரைக்கும் இதுவரைக்கும் 59 படங்கள் வெளிவந்து இருக்கு 60வது படமா பரதன் இயக்கத்தில் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனம் ஆனா 

    Vijaya Vauhini Studios தயாரிகிறது  அது மட்டும் அல்லாமல் பரதன் விஜய் அண்ணாவோட கில்லி படத்துக்கு வசனம் எழுதி இருக்காரு அப்புறம் அழகிய தமிழ் மகன் படத்தோட இயக்குனர் 

       
  2. விஜய் அண்ணா தங்கச்சி பாசம் என்றால் அந்த காட்சி அவ்வளவு தத்ருபமாக இருக்கும் உதாரணமாக வேலாயுதம் கில்லி 
  3. 100 கோடி படங்கள் என்றால் தூப்பாக்கி,கத்தி,தெறி 
  4. இவருடைய கடைசியாக வந்த 15 படங்கள் வரை பல சிக்கல்கள் தாண்டிதான் வெளிவந்து உள்ளது இதில் தோல்வி படங்கள் என்றால் ஒன்று இரண்டு தான் அதுவும் சந்தர்ப்ப சூழ்நிலை தான் காரணம் 
  5. எல்லா ரசிகர்களுககும் பிடித்த படம் என்றால் நண்பன் 
  6.  உலக சினிமாவிலேயே அண்ணா என்று பாசத்துடன் அழைக்கும் ஒரே நடிகர் விஜய் 
  7. வில்லனாக அழகிய தமிழ் மகன் வில்லத்தனம் கலந்த ப்ரியமுடன் போன்ற திரைப்படங்கள் இவரின் வித்தியாசமான நடிப்புக்கு எடுத்துகாட்டு 
  8. புரட்சிகலைஞர் கேப்டன் விஜயகாந்த்,அஜித்,சூர்யா,மோகன்லால்,ஜீவா,ஸ்ரீகாந்த்,என்று பல படங்கள் மற்ற ஹீரோக்கள் அவர்கள் கதாபத்திர தன்மை தனக்கு இருக்கும் அளவு இருக்க பார்த்து கொண்டார் 
  9. புரட்சிகலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு அடுத்து நிறைய புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்தவர் இவரே 
  10.  இவர் நடிகராக மட்டும் அல்லாமல் ஒரு பாடகராக ஜெயித்தவார் தமிழ் சினிமாவில்  சிறப்பாக நடனம் ஆடுபவர்களில் இவரும் ஒருவர் 


விஜய் அண்ணாவை நேசிக்கும் ஒரு ரசிகனாக 

சிவமுருகன் 

வெள்ளி, 17 ஜூன், 2016

குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவதின் ரகசியம்

குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது ஏன் தெரியுமா?
நம் நாட்டில் நிறைய பழக்கவழக்கங்கள் காரணம் தெரியாமலேயே மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது.
ஆனால் அப்படி பின்பற்றப்படும் பழக்கவழக்கங்களுக்கு பின்னணியில் நிச்சயம் ஓர் உண்மை மறைந்திருக்கும்.
முறையாக சொன்னால் யாரும் பின்பற்றமாட்டார்கள் என்று நம் முன்னோர்கள் செய்த வேலை தான் இது.
அதில் குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது என்பது ஒன்று.
பலரும் இது ஓர் குடும்ப வழக்கம், நேர்த்திக்கடன் என்று நினைத்து பின்பற்றி வருகிறார்கள்.
ஆனால் இதற்கு பின்னணியில் உள்ள உண்மையான காரணம் என்னவென்று யாருக்காவது தெரியுமா?
தெரியாதெனில், உங்களது எண்ணத்தை மாற்றி, இனிமேலாவது உண்மையான காரணத்தைத் தெரிந்து கொண்டு பின்பற்றுங்கள்.

‪#‎கருவறையில்‬ 10 மாதம்
பிறக்கும் முன் தாயின் கருவறையில் இருக்கிறோம். இந்த கருவறையில் என்ன சந்தனமும், பன்னீருமா நம்மைச் சுற்றி இருக்கும். இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை நிறைந்த சூழலில் நாம் இருப்போம்.
‪#‎கடல்_நீர்‬
சாதாரணமாக கடல் நீரில் கை விரல்களை 5 நிமிடம் ஊற வைத்து, பின் அவற்றை நன்கு துடைத்துவிட்டு வாயில் வைத்தால் எப்படி உப்பு அப்படியே இருக்கிறது. 5 நிமிடம் ஊற வைத்த கை விரல்களிலேயே உப்பு இருக்கையில், 10 மாதம் இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை நிறைந்த சூழலில் இருந்த நம் உடலில் அவை எவ்வளவு ஊறியிருக்கும்.
‪#‎வெளியேறும்_வழி‬
உடலினுள் சேரும் இந்த கழிவுகள் நம்மை விட்டு எளிதில் வெளியே வந்துவிட்டாலும், நம் தலையில் சேரும் கழிவுகள் மயிர் கால்கள் வழியாகத் தான் வெளியேற முடியும். ஆனால் அதற்கான வழிகள் குறைவு. அதற்காகத் தான் குழந்தை பிறந்த சில மாதங்களுக்குள் மொட்டைப் போடுகின்றனர்.
‪#‎மொட்டை_போடாவிட்டால்‬?
ஒருவேளை அப்படி மொட்டை போடாவிட்டால், அக்கழிவுகள் தலையில் அப்படியே தங்கி, பிற்காலத்தில் அதுவே பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.
‪#‎நேர்த்திக்கடன்‬
இப்படி உண்மைக் காரணத்தைச் சொன்னால், பலரும் அலட்சியப்படுத்தி பின்பற்றமாட்டார்கள். எனவே தான் நேர்த்திக்கடன் என்ற பெயரில் நம் முன்னோர்களால் அது பரப்பப்பட்டது.
‪#‎மூன்று_வயதில்_ஓர்_மொட்டை‬
சிலர் தங்கள் குழந்தைக்கு மூன்று வயதில் ஒரு மொட்டையைப் போடுவார்கள். இதற்கு காரணம், முதல் மொட்டையின் போது சில கிருமிகள் விடுபட்டிருந்தால், இரண்டாவது மொட்டையின் போது வெளியேறிவிடும் என்பதற்காகத் தான்.
‪#‎ஆன்மீக_ரீதிக்கே_மரியாதை‬
நம் மக்களிடையே அறிவியல் ரீதியாக சொல்வதை விட, ஆன்மீக ரீதியாக சொன்னால், கட்டாயம் செய்வார்கள் என்பதை நம் முன்னோர்கள் நன்கு அறிந்துள்ளனர். எப்படியோ, இப்போதாவது உண்மையான காரணத்தை தெரிந்து கொண்டோமே. அதுவே போதும்.

செவ்வாய், 14 ஜூன், 2016

தமிழ் சினிமாவில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த சிறந்த காதல் வசனங்கள் Part 1

தமிழ் சினிமாவில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த சிறந்த காதல் வசனங்கள்

தமிழ் சினிமாவில் அன்று தொட்டு இன்றுவரை காதல் படங்களுக்கு ஒரு தனியிடம் உண்டு. இன்று முன்னணி நடிகர்களாக ஆக்ஷன் காட்டும் பலரையும் இந்தளவிற்கு வளர்த்து விட்டதில் காதலுக்கு பெரும் பங்குண்டு.
ரயில்களில் தொடங்கிய காதல் தற்போது வாட்ஸ் ஆப் வரை வந்து விட்டது. பார்த்த காதல், பார்க்காத காதல், பேசாத காதல் என்று எவ்வளவோ காதல்களை படங்கள் மூலம் பார்த்து விட்டாலும் கூட காதல் இன்னும் பலப்பல வடிவங்களில் வந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்த நிலையில் நாளைய காதலர் தினத்தை முன்னிட்டு தமிழ் சினிமாவின் சிறந்த காதல் வசனங்களை இங்கே பார்க்கலாம்.
அலைபாயுதே 
சக்தி நான் உன்ன விரும்பல, உன்மேல ஆசைபடல, நீ அழகா இருக்கன்னு நெனைக்கல ஆனா இதெல்லாம் நடந்துடுமோன்னு பயமா இருக்கு”. அலைபாயுதே படத்தில் மாதவன் ஷாலினியிடம் கூறும் இந்த வசனத்தை அநேகமாக எல்லாக் காதலர்களும் தங்கள் நிஜ வாழ்க்கையில் பயன்படுத்தி இருப்பார்கள்.

காதலுக்கு மரியாதை
நான் உன்னை ஆயிரம் முறையாச்சும் பார்த்திருப்பேன். கனவுல என் மனசுக்குள்ள, மறந்துடுறேன் எல்லாத்தையும் மறந்துடுறேன் ஆனா போன ஜென்மத்துல எப்பவோ பார்த்து ஆசை தீராத உன் முகம் என் மனசுக்குள்ளேயே இருக்கு. அத என்னால மறக்கவே முடியாதுகாதலுக்கு மரியாதை படத்தில் விஜய் ஷாலினியிடம் சொல்லும் இந்த வசனம் விஜய்யின் சிறந்த காதல் வசனங்களில் ஒன்று.

விண்ணைத்தாண்டி வருவாயா
இந்த உலகத்துல எவ்ளோ பொண்ணுங்க இருந்தும் நான் ஏன் ஜெஸ்சிய லவ் பண்ணினேன்”, “காதல, தேடிட்டு போக முடியாது. அது நிலைக்காது. அதுவா நடக்கனும், நம்மள போட்டு தாக்கனும், தலைகீழா போட்டு திருப்பனும், எப்பவும் கூடவே இருக்கனும்.அது தான் உணமையான லவ்”. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்பு பேசிய இந்த வசனங்கள் இன்றைய தலைமுறைக்கு அதிகம் பிடித்த காதல் வசனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

காக்க காக்க 
நான் உங்களை கல்யாணம் பணிக்கணும் உங்ககூட என் வாழ்க்கைய வாழணும் உங்க கூட சிரிச்சு பேசணும் உங்க கூட சண்டை போடணும் உங்க தோள்ள சாஞ்சு அழனும், இப்ப போலவே உங்க மேல பைத்தியமா இருக்கணும்என்று காக்க காக்க படத்தில் சூர்யாவிடம் ஜோதிகா பேசிய வசனம்.(ஜோதிகா விஷயத்தில் இது உண்மையாகிவிட்டது)

மெட்ராஸ்
நீதான் வேணும் கல்யாணம் பண்ணிக்கிறியா? சரி வா வந்து பைக்ல உக்காரு கல்யாணம் பண்ணிக்கிறேன்மெட்ராஸ் படத்தில் கேத்தரின் தெரசா ஒரே வசனத்தில் தனது காதலை வெளிப்படுத்தும் இந்த வசனம் காதலர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

அஞ்சான் 
இதே போல அஞ்சான் படத்தில் சமந்தா சூர்யாவைப் பார்த்து நீ நிதானமா இல்ல உன் கால் தரையில படல முதல்ல நில்லு அப்புறம் வந்து சொல்லுவசனம்.

ராஜா ராணி
எனக்கு எங்க அப்பாகிட்ட மட்டும் தான் பயம் மத்தபடி ஐ லவ் யூங்கஎன்று நயன்தாராவிடம் ஜெய் காதலை வெளிப்படுத்தும் வசனம் ரசிகர்கள் பலரையும் கவர்ந்தது. இன்றும் பல காதலர்கள் இந்த வசனங்களை எங்கேயோ ஓரிடத்தில் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதே உண்மை


திங்கள், 13 ஜூன், 2016

27 நட்சத்திரங்களுக்கான செவ்வாய் + சனி சேர்க்கை பலன்கள்

40 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கும் செவ்வாய் + சனி சேர்க்கை பலன்கள்  27 நட்சத்திரங்களுக்கும் விரிவாக கொடுக்கபட்டு உள்ளது 



உலகின் அதி முக்கிய அதிசிய நிகழ்வுகத காலங்கள் உலக ஜீவன்கள் அனைவருக்கும்அவரவர் பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில் பலன்கள் வழங்க  உள்ளார். www.myathistam.blogspot.com 

இதனால் ஏற்படக்கூடிய பலன்களைப் பற்றிய விரிவாகவும்தெளிவாகவும் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் சித்தர்களின் சூட்சும பண்டைய நூற்களின் வழிகாட்டுதலின் படியும் நட்சத்திர கோச்சர பலன்தாரபலன்,சுபவர்க்க யோகா பலன்கிரக சூனியன் பலன், சித்தர்கள் அருளிய அதிசுட்சும மிகவும் பழமையானவேதத்ரஈ பயன்படுத்தி எல்லாம் வல்ல ஸ்ரீ பிரம்ம சக்தி அருளால் பலன்களை வழங்குகின்றோம். 9442156790







நமது கர்மங்களை அழிப்பதற்கும்,நமது எதிர்காலம் பற்றி அறிந்து அதன் மூலமாகநிம்மதியாகவும்,செல்வச் செழிப்போடும் வாழவும் ஜோதிடம் வழிகாட்டுகிறது.
ஏராளமான ஜோதிட வாசகர்கள் தமது பிறந்த தேதி,பிறந்த ஊர்,பிறந்த நேரம் இவற்றை நமக்குஅனுப்புகிறார்கள்.அப்படி அனுப்புவதற்குப்பதிலாக,உங்களுடை  பிறந்த ஜாதகத்தின் நகலை ஸ்கேன்செய்து அனுப்பினால்,வெகு விரைவாகவும்,துல்லியமாகவும் பலன்களை கணித்துக்கூற இயலும்.
உங்கள் பிறந்த ஜாதகத்தில் இருக்கும் இராசிச்சக்கரம்,அம்சம் சக்கரம்,கிரகங்கள் நிற்கும் நட்சத்திரபாதசாரங்கள்,பிறக்கும்போது இருக்கும் ஜனன கால திசா புக்தி இருப்பு இவைகளை அனுப்பினாலேபோதுமானது.உடன் உங்களது ஜோதிடக்கேள்விகளை அனுப்பவும்.

+91 9442156790  
myathistam@gmail.com