Nanbanin Thigil

Nanbanin Thigil
Click Here Poster Direct to Link Go Youtube

ஞாயிறு, 29 மே, 2016

Ethitha Veetu Kaliflowera Song Review பாடல் விமர்சனம்







 #காளிபிளவரே பாடல் விமர்சனம்


Song: Ethitha Veetu Kaliflowera
Album/Movie: Raja Mandhiri
Artist Name: Kalaiyarasan, Kali Venkat, Bala Saravanan, Shaalin Zoya, Vaishali Baba Saravana
Singer: A.C.S. Ravichandran
Music Director: Justin Prabhakaran
Lyricist: Justin Prabhakaran
Music Label: Lahari Music


ஒரு சில பாடல்கள் கேட்ட மறுநொடியே பிடித்துவிடும் அந்த மாதிரியான பாடல் தான் இவை

ஜஸ்டின் பிரபாகரன் ஆள் பார்க்க ரொம்ப சிறியவர் போல் இருந்தாலும் சும்மா வெரட்டி வெரட்டியா டோன் நிறைய போடுறாரு  அது மட்டும் இல்லாமல் இந்த பாட்ட வேற எழுதி இருக்காரு நம்ம ஜஸ்டின்

காளிபிளவரே பாடலை எடுத்து கொண்டால் சும்மா திகட்ட திகட்ட பொண்ணுங்ககிட்ட லவ் சொல்ல அலையிற பசங்களை குறி வச்சு எழுதுனது நினைக்கிறன் அதுமட்டுமா நமக்கு பிடிச்ச பழைய படங்கள் பெயரை பாட்டுலா சொல்லி நம்மளா நினைவுகளை நோக்கி திருப்பி விடுகிறார்

ஆனா ஒன்னும் மட்டும் சொல்லவில்லை என்றால் இந்த விமர்சனம் எழுதுவதில் எனக்கு தகுதியில்லை.

அதான் கிராமத்து மண்மனம் மாறாமல் தத்துருமபாக வரிகளை வடிவமைத்தது அப்படியே ஒன்று ஒன்றும் கிராமத்திற்குள் சென்றுவந்த நிகழ்வை மனதில் பதியவைக்கிறது பாடலை மட்டும் கேட்க்கும் போது இப்படி என்றால் படத்தை பார்க்கும் போது எப்படி இருக்கும்

A.C.S.ரவிச்சந்திரன் அவர்களின் வாய்ஸ் என்ன ஒரு கிராமத்து கானா மயில் குயில் கண்டிப்பாக ஒரு பெரிய ரவுண்டு வருவார் A.C.S.ரவிச்சந்திரன் கிராமத்து பாடல்களில்

இந்த படத்தின் பெருமையே படத்தின் இயக்குனர் ஒரு பெண் என்பது தான் அவர் தான் கடந்து வந்த பாதையில் பட்ட சிரமங்களை ஒரு இதழுக்கு பேட்டி அளித்துயிருந்தார்  அதை படிக்கும் போது என் மனதே உணர்ச்சிவசப்பட்டது

சினிமா என்றால் என்ன அதில் பெண்களின் பங்கு என்ன,அதில் அவர்கள் படும்பாடு எப்படி என்று அதில் சுருக்கமா சொல்லி இருந்தார்

கண்டிப்பாக படம் கிராமத்து மண்மணம் மாறாமல் இருக்கும் அதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்

மொத்தத்தில் கிராமத்து மண்மணம் பாடல்

படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்

அன்புடன் 
சிவமுருகன் 
     


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக