திங்கள், 22 ஆகஸ்ட், 2016

கபாலி கடந்து வந்த பாதை - 1

கபாலி


கபாலி — கடந்த ஒரு மாதமாக எங்கும், எதிலும் ஒலித்த ஒரு பெயர்! இதற்கு 'சூப்பர்ஸ்டார்' என்ற ஒருவரே காரணம்.

'லிங்கா' என்று ஒரு படத்தைக் கொடுத்து, அந்தப் படம் தோல்வி அடையவே, "தலைவர் அடுத்த படத்தை இயக்கப் போவது யார்?" என்று ஒரு பெரிய பட்டிமன்றமே நடந்தது. (என் பார்வையில் லிங்கா ஒரு நல்ல திரைப்படம் தான்; மறைந்த ஜான் பென்னிகுவிக் அவர்கள் பட்ட கஷ்டத்தைக் கண்முன்னே காட்டியது).

திடீரென்று ஒரு நாள், "கலைப்புலி தாணு தயாரிப்பில், 'அட்டகத்தி', 'மெட்ராஸ்' படங்களின் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தலைவர் நடிக்கப் போகிறார்" என்று ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியது. (இதை யாருமே எதிர்பார்க்கவில்லை!)

அதன் பிறகு தன்ஷிகா, ராதிகா ஆப்தே, ஜான் விஜய், 'அட்டகத்தி' தினேஷ், கலையரசன், கிஷோர், சந்தோஷ் நாராயணன், முரளி என்று ஓர் இளம் பட்டாளத்துடன் சேர்த்து புதிய கூட்டணியை அமைத்தார் ரஞ்சித். 'கபாலி' என்று பெயர் சூட்டி, விநாயகர் சதுர்த்தியன்று படத்தைப் பூஜை போட்டு ஏவிஎம் (AVM) ஸ்டுடியோவில் ஆரம்பித்தார்கள்.

முதல் நாளே சில காட்சிகள் செல்போன் கேமராவில் எடுக்கப்பட்டு இணையத்தில் வெளியாகின. இருப்பினும், மலேசியாவில் தலைவருக்கு அளித்த வரவேற்பைக் கண்டு உலக சினிமாவே மிரண்டது! இதுவரை எந்தவொரு கடைத் திறப்பு விழாவிலும் பங்கெடுக்காத சூப்பர்ஸ்டார், மலேசியாவில் ரசிகர் ஒருவரின் கடையைத் திறந்து வைத்தார். மலேசிய அரசாங்கமும் காவல்துறையும் மிகப்பாரிய ஆதரவை வழங்கின. இதுவரை ஒரு திரைப்படத்திற்கு எந்தவொரு நாடும் இப்படி ஓர் ஆதரவை வழங்கியதில்லை.

படத்தைப் பற்றிப் பல பேர் பல கதைகளை எழுதினார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் கதைகள் பரவுவது நின்றுவிட, படக்குழு நிம்மதி அடைந்தது. தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த வில்லன் நடிகர் உள்ளே வர, அந்த நாட்டுப் பக்கமும் எதிர்பார்ப்பு அதிகமானது.

"மே 1-ஆம் தேதி டீசர் வெளியிடப்படும்" என்று அறிவிப்பு வெளிவந்தபோதே இணையம் ஸ்தம்பித்தது. மே 1 அன்று காலை சரியாக 11:00 மணி அளவில் டீசர் வெளியிடப்பட்டது. வெளியான ஐந்து நிமிடங்களுக்குள்ளேயே 50,000-க்கும் மேற்பட்டோர் பார்க்க, யூடியூப் (YouTube) இணையமே திணறியது! எல்லா நாட்டு நடிகர்களும், "60 வயதைக் கடந்த ஒரு நடிகருக்கு இவ்வளவு வரவேற்பா?!" என்று வாயைப் பிளந்தார்கள்.

டீசரில் வரும் ஒற்றை வரியான "மகிழ்ச்சி..." என்ற ஒரு சொல் மிக பிரபலமானது. (நான் கூட இப்போது நிறைய இடங்களில் இந்த 'மகிழ்ச்சி' என்ற வார்த்தையை உபயோகிக்க ஆரம்பித்துவிட்டேன்!) "நெருப்புடா... நெருங்குடா..." என எங்கும் இதே பாடல்தான் ஒலித்தது.

ஜூன் 12-ல் இசை வெளியீடு என்று அறிவிக்கப்பட்டு, திங்க் மியூசிக் (Think Music) யூடியூப் தளத்தில் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால், 'நெருப்புடா' பாடல் இணையத்தில் கசியத் தொடங்க, ஜூன் 11 மாலையிலேயே அனைத்துப் பாடல்களையும் யூடியூப் தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்கள்.

இதுவரை எந்தவொரு இந்தியப் படத்திற்கும் செய்யாத ஒரு பிரம்மாண்ட விளம்பரம் இந்தப் படத்திற்குச் செய்யப்பட்டது. முதன்முறையாக விமானத்தில் படத்தின் போஸ்டர் ஒட்டி விளம்பரம் செய்யப்பட்டது! உலக சினிமாவே இதை ஓர் அதிசயம் போலப் பார்த்தது. (தாணு அன்று சொன்னதை, அன்று செய்து காட்டினார்!)

படம் வெளியாகும் தேதியில் பல வதந்திகள் வர, கடைசியாக ஜூலை 22 என்று அறிவிப்பு வெளியானது. இதனால் சுமார் 20 திரைப்படங்கள் தள்ளிப் போயின.

முதல் நாள் வசூல் மட்டுமே 104 கோடி எனக் கணக்கு காட்ட, இந்தியத் திரையுலகமே அசந்து போனது! நிறைய படங்கள் 'கபாலி'யுடன் போட்டி போட முடியாமல் பின்வாங்கின. ஆனால், ஒரே ஒரு படத்தை மட்டும் கபாலியால் அடிக்க முடியவில்லை; அந்தப் படம் 'அப்பா'.

இரண்டுமே உணர்வுப்பூர்வமான திரைப்படங்கள் (Emotional Drama) என்பதால், இரண்டு படங்களுமே வசூலை வாரிக்குவித்தன!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

Nanbanin Thilgil/ நண்பனின் திகில் (With English-Sub Titles ) Short Film ...

My First Short Film. Award Select Short film Actors : Balaji Saravanan - Rajapandi.S.S Concept : Rajapandi.S.S Cinematography : RajaPa...